போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 6 பேர் கைது; பரபரப்பு தகவல்

by Staff / 03-09-2024 03:57:48pm
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 6 பேர் கைது; பரபரப்பு தகவல்

செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடி பகுதியில் கடந்த வியாழக்கிழமை அன்று வருவாய் புலனாய்வு அதிகாரிகள் வாகன சோதனை செய்தார்கள். அப்போது ஒரு காரை மடக்கி ஆய்வு செய்தனர். அதில் டிரைவர் உள்பட மொத்தம் 3 பேர் பயணம் செய்தார்கள். அந்த வாகனத்தில் உயர் வகை போதைப் பொருள் கடத்தப்படுவதாக ஏற்கனவே ரகசிய தகவல் கிடைத்திருந்தது.

இருந்தாலும் புலனாய்வுத்துறையினருக்கு சந்தேகம் தீர வில்லை. எனவே காரின் பின்பக்க இருக்கையை அகற்றி பார்த்தனர். அதற்கு அடியில் ரகசிய பெட்டி ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அந்தப் பெட்டிக்குள் 10 அந்த பொட்டலங்களில் மெத்த பெட்டமின் போதைப் பொருள்கள் இருந்தன. இதன் மொத்த எடை 10. 13 கிலோ ஆகும். இதன் மதிப்பு ரூ. 50. 65 கோடி. இதையடுத்து அந்த 3பேரையும் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கைதுசெய்தனர். பின்னர் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

அதாவது தூத்துக்குடியைச் சேர்ந்த ரெனால்டு வில்லவராயர் என்பவரிடம் இருந்து இந்தப் போதைப் பொருளை பெற்றதாக கூறியுள்ளார்.இதையடுத்துரெனால்டு வில்லவராயரையும் கைது செய்யும் முயற்சியில் அதிகாரிகள் இறங்கினார்கள். அவர் எழும்பூரில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு வைத்து அவர் கைது செய்யப்பட்டார். அவர் தூத்துக்குடியில் மீனவர் சங்க நிர்வாகியாகவும், கப்பல் நிறுவன உரிமையாளருமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

 

Tags :

Share via