சிறுமி பலி.. நூடுல்ஸ் கிடங்குகளில் ஆய்வு செய்ய ஆணை

by Staff / 03-09-2024 03:53:46pm
சிறுமி பலி.. நூடுல்ஸ் கிடங்குகளில் ஆய்வு செய்ய ஆணை

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அடுத்துள்ள அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் ஜூடி மெயில்ஸ் (15). இந்நிலையில், ஆன்லைனில் நூடுல்ஸ் வாங்கி சாப்பிட்ட அவர் உயிரிழந்ததையடுத்து தமிழகம் முழுவதும் நூடுல்ஸ் கிடங்குகளில் ஆய்வு செய்ய உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது. பாக்கெட்டுகளில் பேட்ச் எண் மற்றும் உணவு பொருட்களின் தரச்சான்றிதழ் இருக்க வேண்டும். சான்று இல்லாத பொருட்களை பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via