தொழில் நஷ்டம்- தம்பதி தற்கொலை

by Editor / 31-03-2025 02:48:51pm
தொழில் நஷ்டம்- தம்பதி தற்கொலை

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வால்பாறையைச் சேர்ந்த கார்த்தி (33) மற்றும் அவரது மனைவி வினோபா (32) ஆகியோர் தொழில் நஷ்டம் காரணமாக தற்கொலை செய்து கொண்டனர்.
இவர்கள் இருவரும் மாக்கினாம்பட்டியில் உறவினர் வீட்டில் தங்கி இருந்து உணவு விடுதி நடத்தி வந்தனர். சமீபகாலமாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மனமுடைந்து காணப்பட்டனர். இந்நிலையில், இருவரும் தங்கள் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via