மறியலில் ஈடுபட்ட 60 பேர் மீது விழுப்புரம் போலீசார் வழக்கு

விழுப்புரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 60 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.விழுப்புரம், வழுதரெட்டியைச் சேர்ந்தவர் குணசேகரன், 40; இவர், நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தார்.விபத்து ஏற்படுத்தியவரை கண்டுபிடித்து கைது செய்யக் கோரி, விழுப்புரம், எல்லீஸ்சத்திரம் பைபாஸ் சாலையில், இறந்தவர் மனைவி சசிரேகா உட்பட 60 பேர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 60 பேர் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Tags : Road blockade: Case against 60 people