தமிழகத்தில் 82,000 பேருக்கு வேலைவாய்ப்பு

by Editor / 20-07-2021 12:06:49pm
தமிழகத்தில் 82,000 பேருக்கு வேலைவாய்ப்பு

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும் மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு முதல்வர் மட்டுமல்லாமல் திமுக அமைச்சர்களும் பல அதிரடியான நடவடிக்கைகள் எடுத்து வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் 47 புதிய திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கையெழுத்திடுகிறார். இதன் காரணமாக ஆட்டோமொபைல், காற்றாலை உள்ளிட்ட துறைகளில் 82 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகின்றது.

 

Tags :

Share via

More stories