அதிமுகவிலிருந்து திமுகவில் இணைந்த முக்கிய நிர்வாகிகள்

by Editor / 20-07-2021 12:46:32pm
அதிமுகவிலிருந்து திமுகவில் இணைந்த முக்கிய நிர்வாகிகள்

அதிமுகவின் கழகத்தின்‌ கொள்கை-குறிக்கோள்களுக்கும்‌ கோட்பாடுகளுக்கும்‌ முரணான வகையில்‌ செயல்பட்டதாலும்‌, கழகத்தின்‌ கண்ணியத்திற்கு மாசு ஏற்படும்‌ வகையில்‌ நடந்து கொண்டதாலும்‌, கழகக்‌ கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும்‌ அவப்‌ பெயரும்‌ உண்டாகும்‌ விதத்தில்‌ செயல்பட்ட காரணத்தினாலும்‌, கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தைச்‌ சேர்ந்த ராஜன்‌ - நாகர்கோவில்‌ தொகுதி மாவட்டக்‌ கழக துணைச்‌ செயலாளர்‌, லதா ராமச்சந்திரன்‌ - மாவட்டக்‌ கழக இணைச்‌ செயலாளர்‌, கிருஷ்ணகுமார்‌ - தோவாளை ஒன்றியக்‌ கழக முன்னாள்‌ செயலாளர்‌, மாடசுவாமி - ஆரல்வாய்மொழி பேரூராட்சிக்‌ கழகச்‌ செயலாளர்‌, மோசஸ்‌ ராமச்சந்திரன்‌ - தோவாளை தெற்கு ஒன்றியக்‌ கழக அவைத்‌ தலைவர்‌, தென்கரை மகராஜன்‌ - தோவாளை வடக்கு ஒன்றியக்‌ கழகப்‌ பொருளாளர்‌, பாலசுப்பிரமணியன்‌ (௭) சுதாகர்‌ - தோவாளை தெற்கு ஒன்றிய இளைஞர்‌ பாசறை, இளம்‌ பெண்கள்‌ பாசறைச்‌ செயலாளர்‌, ஜெயந்தி - தோவாளை வடக்கு ஒன்றியக்‌ கழக மாவட்டப்‌ பிரதிநிதி, நாஞ்சில்‌ டோமினிக்‌ - கழக இலக்கிய அணி துணைச்‌ செயலாளர்‌, வரதராஜன்‌ - மாவட்ட இளைஞர்‌ பாசறை, இளம்‌ பெண்கள்‌ பாசறை இணைச்‌ செயலாளர்‌ ஆகியோர்‌, கழகத்தின்‌ அடிப்படை உறுப்பினர்‌ பொறுப்பு உட்பட அனைத்துப்‌ பொறுப்புகளில்‌ இருந்தும்‌ நீக்கி வைக்கப்படுகிறார்கள்‌ என அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

இந்நிலையில், அதிமுக கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மற்றும் நீக்கப்படாத நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக இன்று மாலை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

 

Tags :

Share via

More stories