நெல்லை - பெங்களூர் இடையே தென்காசி வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கம் - முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.

பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக நெல்லை-பெங்களூர் சிவமொக்கா ரயில் நிலையம் இடையே தென்காசி வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக முன்னதாக தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.
அதன்படி, திருநெல்வேலியில் இருந்து வருகின்ற 17-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4:20 மணிக்கு புறப்படும் இந்த ரயிலானது, பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், விருதுநகர், மதுரை வழியாக மறுநாள் திங்கட்கிழமை மதியம் 12:30 மணிக்கு பெங்களூர் சிவ மொக்கா ரயில் சென்றடையும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதேபோல், மறு மார்க்கமாக பெங்களூர் சிவ மொக்கா ரயில் நிலையத்திலிருந்து 18-ம் தேதி திங்கட்கிழமை மதியம் 2:15 மணிக்கு ரயிலானது புறப்பட்டு மதுரை, விருதுநகர், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி, பாவூர்சத்திரம் வழியாக திருநெல்வேலியை செவ்வாய்க்கிழமை காலை 10:15 மணிக்கு வந்தடையும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவானது இன்று காலை 8 மணி முதல் தொடங்கப்பட உள்ள நிலையில் பயணிகள் இந்த சிறப்பு ரயில்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags : நெல்லை - பெங்களூர் இடையே தென்காசி வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கம் - முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.