ஆட்டோ, வேன் மோதியதில் இருவர் பலி.

மதுரை எஸ். எஸ். காலனி பாரதியார் 3-வது தெருவை சேர்ந்த தங்கபாண்டி என்பவர் ஆட்டோ டிரைவராக உள்ளார்.இவரது மனைவி வடிவுக்கரசி(33) தோப்பூரில் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க கணவன்-மனைவியும் அதே பகுதியை சேர்ந்த மகமாயி(63), கனிமொழி(40) ஆகியோரும் ஆட்டோவில் சென்றனர்.ஆட்டோ திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் தோப்பூர் பிரிவு சாலையில் திரும்பாமல் தொடர்ந்து சென்றது. கூத்தியார்குண்டு அருகே சென்றபோது வழிதவறி வந்ததை உணர்ந்த தங்கபாண்டி உடனே ஆட்டோவை நான்கு வழிச்சாலையில் நிறுத்தியுள்ளார்.அப்போது திண்டுக்கல்லில் இருந்து விருதுநகருக்கு நோக்கி சென்று கொண்டிருந்த மினிவேனானது ஆட்டோ மீது பயங்கரமாக மோதியதில் ஆட்டோ முழுவதுமாக சேதமடைந்து அதிலிருந்த 3 பெண்கள் உள்பட 4 பேரும் படுகாயமடைந்தனர்.அப்பகுதியினர் காயமடைந்தவர்களை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்கள் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி வடிவுக்கரசி, மகமாயி ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். தங்கபாண்டி, கனிமொழி சிகிச்சை பெற்று வருகிறார்கள்.இது குறித்து திருமங்கலம் நகர் போலீசார் வேன் டிரைவரான அருப்புக்கோட்டையை சேர்ந்த கோபால கிருஷ்ணன் என்பவரை கைது செய்தனர்.
Tags :