பைக்கில் சென்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட ராதிகா சரத்குமார்.

by Editor / 13-04-2024 10:30:59am
 பைக்கில் சென்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட ராதிகா சரத்குமார்.

விருதுநகர் தொகுதி பா.ஜ.க. வேட்பாளராக  களமிறங்கியுள்ள ராதிகா சரத்குமார் தனது கணவர் சரத்குமாருடன் பைக்கில் சென்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

வரும் 19, 2024 பாராளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் சூடு பிடிக்க தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு கட்சிகளும் பல்வேறு விதமான வழிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். துண்டு பிரசுரங்கள், டிஜிட்டல் விளம்பரங்கள் ,தொலைக்காட்சி விளம்பரங்கள், வாகன வழி, ஒளிபெருக்கி பிரச்சாரம், வாகன அணி வகுப்பு, தெருமுனை பிரச்சாரம் என  வேட்பாளர்கள் பல்வேறு உத்திகளை கையாண்டு வருகின்ற போக்கு காணப்படுகிறது .நடிகரும் நடிகையுமான ராதிகா சரத்குமார் இருவரும்  பைக்கில் வீதி வீதியாக வந்து விருதுநகர் தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருவது பொதுமக்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது .இத்தொகுதியில் தான் நடிகர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனும் களம் காண்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags : ராதிகா சரத்குமார்

Share via

More stories