கொரோனா நிலவரம்- 10,197 பேருக்கு தொற்று
கொரோனா பாதிப்பால் கேரளாவில் 210 பேர் உள்பட நேற்று நாடு முழுவதும் 301 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,64,153 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,197 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. நேற்று முன்தினம் பாதிப்பு 8,865 ஆக இருந்தது. இந்நிலையில் பரிசோதனை அதிகரித்ததன் காரணமாக பாதிப்பு சற்று உயர்ந்துள்ளது.
நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 5,516 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நாட்டில் மொத்த பாதிப்பு 3 கோடியே 44 லட்சத்து 66 ஆயிரத்து 598 ஆக உயர்ந்தது.
கொரோனா பாதிப்பால் கேரளாவில் 210 பேர் உள்பட நேற்று நாடு முழுவதும் 301 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,64,153 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 12,134 பேர் மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 38 லட்சத்து 73 ஆயிரத்து 890 ஆக உயர்ந்தது.
தற்போது 1,28,555 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது கடந்த 527 நாட்களில் இல்லாத அளவு குறைவு ஆகும்.
நாடு முழுவதும் நேற்று 67,82,042 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 113 கோடியே 68 லட்சத்தை கடந்துள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல் படி, இதுவரை 62.70 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.இதில் நேற்று 12,42,177 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
Tags :



















