தமிழ்நாட்டில் இன்று முதல் 15ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு.

by Editor / 12-03-2023 09:52:22am
தமிழ்நாட்டில் இன்று முதல் 15ஆம் தேதி வரை  மழைக்கு வாய்ப்பு.

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல் 15ஆம் தேதி வரை தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான, மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

 

Tags :

Share via
Logo