ரவுடி படுகொலை விவகாரம்: இறுதி ஊர்வலத்தில் கலவரத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு

திருவாரூர் அருகே கமலாபுரம் என்கிற பகுதியில் வளரும் தமிழகம் என்ற கட்சியின் மண்டல இளைஞரணி செயலாளர் ரவுடி பூவனூர் ராஜ்குமார் நேற்று முன்தினம் 8 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று மாலை அவரது சொந்த ஊரான நீடாமங்கலம் பகுதியில் அவரது உடல் எடுத்துச் சென்ற பொழுது ஊர்வலத்தில் பங்கேற்ற நபர்கள் நீடாமங்கலம் கடைவீதியில் உள்ள கடைகளை அடித்து நொறுத்தினர் மேலும் காவல்துறை வாகனங்களை தாக்கினர் இது தொடர்பாக 10 பேர் மீது பொது சொத்து சேதப்படுத்துதல் தகாத வார்த்தைகளால் பேசுதல் உள்ளிட்ட ஐந்து பிரிவின் கீழ் நீடாமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.மேலும் உயிரிழந்த ராஜ்குமார் உடலை சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக 30 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags :