பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் பலி.

by Editor / 15-12-2023 10:08:28am
பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் பலி.

விருதுநகர், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பனையடிப்பட்டி கிராமத்தில் தனியார் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் இன்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் கண்டியாபுரத்தை சேர்ந்த சண்முகராஜ் (வயது 36) என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, பட்டாசு ஆலை வெடி விபத்து நிகழ்ந்த பகுதிக்கு தீயணைப்புத்துறையினர் விரைந்துள்ளனர்.இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில்,வெடி மருந்து கலக்கும்போது வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

 

Tags : பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் பலி.

Share via

More stories

Logo