by Editor /
26-06-2023
08:48:44am
மதுரை மாவட்டம் கருவனூரில் கோவில் மரியாதை அளிப்பதில் இரு தரப்பினர் மோதல் வழக்கு அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மற்றும் திமுக கிளை செயலாளர் கைது. கோவிலில் முதல் மரியாதை அளிப்பதில் இரு தரப்பினரிடையே மோதல் வழக்கு : மதுரை சமயநல்லூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பொன்னம்பலம் அவரது மகன்கள் திருச்சிற்றம்பலம், தில்லையம்பலம் ஆகிய 3பேர் கைது.
மற்றொரு தரப்பில் திமுக கிளை செயலாளர் வேல்முருகன், செந்தமிழன், ராஜமோகன் ஆகிய 3 பேரை சத்திரபட்டி காவல்துறையினர் கைது செய்தனர்.
<br />
நேற்று முன்தினம் நடைபெற்ற மோதலில் முன்னாள் எம்எல்ஏவின் கார் எரிக்கப்பட்டதோடு, அவரது உறவினர்களின. வீடுகள்,பைக்குகள் நொறுக்கப்பட்டது குறிப்பிடதக்கது.
Tags :
Share via