டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் முக்கிய அறிவிப்பு

by Staff / 15-03-2023 01:11:29pm
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் முக்கிய அறிவிப்பு

டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான கெஜ்ரிவால் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச சட்டசபை தேர்தல்களில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். ராஜஸ்தானில் 200 இடங்களுக்கும், மத்தியப் பிரதேசத்தில் 230 இடங்களுக்கும் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தனது கட்சியை பார்த்து பயப்படுவதாக கெஜ்ரிவால் கூறியுள்ளார். மத்திய பிரதேசத்தில் காங்கிரஸின் கமல்நாத் அரசை பாஜக கவிழ்த்த விதம் குறித்து கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார். தற்போது டெல்லி, பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சியில் உள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo