சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து நகை பறிப்பு.. இருவர் கைது

by Editor / 09-10-2026 12:18:15pm
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து நகை பறிப்பு.. இருவர் கைது

திருநெல்வேலி மாநகரில் 17 வயது சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு அளித்து, நகைப் பறிப்பில் ஈடுபட்டதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தென்பத்து பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். சிறுமியிடம் பாலியல் தொந்தரவு அளித்ததுடன், நகையைப் பறித்ததாக அவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo