56 ஆம் ஆண்டு வெண்மணி தியாகிகள் நினைவு தினம்.

by Editor / 25-12-2024 11:23:47am
56 ஆம் ஆண்டு வெண்மணி தியாகிகள் நினைவு தினம்.

 தஞ்சை மாவட்டத்தில் கீழ்வெண்மணி கிராமத்தில் 1968 ஆம் ஆண்டு ஒருபடி நெல்மணியை கூலியாக உயர்த்தி கேட்டதற்காக நிலக்கிழார்களால் நடத்தப்பட்ட படுகொலை சம்பவத்தில்  20 பெண்கள், 19 குழந்தைகள் உட்பட 44 பேர்  ஒரே குடிசையில் வைத்து எரித்து படுகொலை செய்யப்பட்டனர்இந்த சம்பவத்தின் நினைவேந்தல் நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த கீழ்வெண்மணியில்  தியாகிகள் 55 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.இந்தநிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ஜி.ராமகிருஷ்ணன், நாகை எம்பி, வை.செல்வராஜ், உள்ளிட்ட நிர்வாகிகள்  வெண்மணி தியாகிகள் நினைவு ஸ்தூபியில் அஞ்சலி செலுத்தினர்.வெண்மணி நினைவு ஸ்தூபியில் பேரணியாக நாள் முழுவதும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 

Tags : 56 ஆம் ஆண்டு வெண்மணி தியாகிகள் நினைவு தினம்.

Share via