பேச்சிப்பாறை அணையில் இருந்து நீர்திறப்பு.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக பேச்சிப்பாறை அணையில் இருந்து இன்று காலை 10 மணிக்கு 500 கன அடி உபரி நீர் தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் திறந்து விடப்படுகிறது. எனவே தாமிரபரணி,கோதையாறு, ஆற்றின் கரையோரம் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆற்றில் குளிப்பதை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரீதர்தெரிவித்துள்ளார்.
Tags : பேச்சிப்பாறை அணையில் இருந்து நீர்திறப்பு.