பகுஜன் சமாஜ் கட்சியை வளர்க்கப்போகிறாரா பா.ரஞ்சித்..

by Staff / 19-07-2024 12:34:53pm
பகுஜன் சமாஜ் கட்சியை வளர்க்கப்போகிறாரா பா.ரஞ்சித்..

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் சமீபத்தில் சென்னையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அவரது படுகொலை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அதிமுக, திமுக என ஆட்சிகள் மாறினாலும் தலித் பிரச்சனைகள் இரண்டாம் தரமாகதான் பார்க்கப்படுவதாகவும், 2026 தேர்தலில் தனது அரசியல் நிலைபாடு மாறும் எனவும் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். பா.ரஞ்சித், பிஎஸ்பி கட்சியை வழி நடத்தக்கூடும் என பேசப்படுகிறது.

 

Tags :

Share via