வழக்கறிஞர் கொலை வழக்கில் தொடர்புடைய திமுக பிரமுகர் ஓட ஓட வெட்டி கொலை.

சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த வழக்கறிஞர் கவுதம் கொலை வழக்கில் கைதான திமுக பிரமுகரும், ரியல் எஸ்டேட் அதிபருமான குணசேகரன், சிறையிலிருந்து வெளிவந்த நிலையில் நேற்று மாலை படுகொலை செய்யப்பட்டார். காரில் சென்றுகொண்டிருந்தபோது, அடையாறு அருகே பைக்கில் வந்த 6 பேர் கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டிய நிலையில், சம்பவ இடத்திலேயே முகம் சிதைந்த நிலையில் குணசேகரன் உயிரிழந்தார். வழக்கறிஞர் கவுதம் கொலைக்கு பழிக்குப் பழியாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
Tags : வழக்கறிஞர் கொலை வழக்கில் திமுக பிரமுகர் ஓட ஓட வெட்டி கொலை.