இந்து மகாசபா தலைவர் ஸ்ரீ போக்சோ வழக்கில் கைது.
அகில இந்திய இந்து மகாசபா தலைவராக இருந்துவருபவர் கோடம்பாக்கம் ஸ்ரீ என்பவர்.இவர் மீது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை தி.நகர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ, வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். நில அபகரிப்பு வழக்கில் கடந்த 2021ஆம் ஆண்டு ஏற்கனவே இவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags : இந்து மகாசபா தலைவர் ஸ்ரீ போக்சோ வழக்கில் கைது



















