மதிப்பற்ற மனித உயிர்கள்..மரணித்த மனிதநேயம்.

by Editor / 24-01-2025 10:30:12pm
மதிப்பற்ற மனித உயிர்கள்..மரணித்த மனிதநேயம்.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 85 வயது மூதாட்டி இறக்கும் தருவாயில் வெளியே அனுப்பப்பட்டுள்ளார். அவரை அவரது மகன் வெளியே அழைத்து வந்த சில நிமிடங்களில் மூதாட்டி இறந்ததாக்க கூறப்படுகிறது.இதன் தொடர்ச்சியாக மூதாட்டி உடலை அவரது மகன் பதினெட்டு கிலோமீட்டர் தொலைவு வரை சைக்கிளில் வைத்து தள்ளி சென்ற அவலம் அரங்கேறியுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி.மனிதநேயமிக்கவர்களின்  கண்களை குள மாக்கும் சம்பவமாக அமைந்து உள்ளது. திருநெல்வேலி மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்தின் இந்த செயலால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

Tags : மதிப்பற்ற மனித உயிர்கள்..மரணித்த மனிதநேயம்.

Share via