தமிழக சட்டசபை கூட்டம்  பரபரப்பான அரசியல் சூழலில் இன்று தொடங்குகிறது.

by Staff / 14-10-2025 09:48:11am
தமிழக சட்டசபை கூட்டம்  பரபரப்பான அரசியல் சூழலில் இன்று தொடங்குகிறது.

தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 6-ம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டம் 4 நாட்கள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மார்ச் 14-ம் தேதி சட்டசபையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் ஆனது. அதைத்தொடர்ந்து, மார்ச் 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை 2 பட்ஜெட்டுகள் மீதான பொது விவாதம் நடைபெற்றது. மார்ச் 24-ம் தேதி முதல் ஏப்ரல் 29-ம் தேதிவரை   துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடந்தன. பின்னர் தேதி குறிப்பிடாமல் சட்டசபை கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது.

இந்த நிலையில் 6 மாத கால இடைவெளியில் சட்டசபை மீண்டும் கூட்டப்பட வேண்டும் என்ற அவை விதியின் அடிப்படையில், தமிழக சட்டசபை மீண்டும்  பரபரப்பான அரசியல் சூழலில் சட்டசபை இன்று  கூடுகிறது.இன்றைய கூட்டத்தில் சமீபத்தில் உயிரிழந்த முக்கியஸ்தர்கள், கரூர் துயரத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். நாளை முதல் 2025-26-ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெறும்.

 

Tags : தமிழக சட்டசபை கூட்டம் இன்று தொடங்குகிறது

Share via