துபாய் மன்னர் முகம்மது சேக்கின் 72 வது பிறந்தநாள் கிள்ளியூர் பெட்ரோல் பம்ப்பில் கொண்டாட்டம். 

by Editor / 15-07-2023 10:11:21pm
துபாய் மன்னர் முகம்மது சேக்கின் 72 வது பிறந்தநாள் கிள்ளியூர் பெட்ரோல் பம்ப்பில் கொண்டாட்டம். 

குமரி மாவட்டம் கருங்கல் பகுதியை சேர்ந்தவர் ஜோஸ். இவர் துபாய் நாட்டில் பல வருடங்களாக பணிபுரிந்து விட்டு தற்போது சொந்த ஊரான கருங்கலில் வசித்து வருகிறார். தற்போது கிள்ளியூர் பகுதியில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பெட்ரோல் பம்ப் ஏஜென்ஸி ஒன்றை நடத்தி வருகிறார்.
வெளிநாட்டில் பணிபுரிந்த போது தனக்கு நல உதவிகள் செய்து கொடுத்த தற்போதைய துபாய் மன்னர் சேக் முகம்மதுவின் 72 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, தனக்கு உதவி செய்த மன்னருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தனது பெட்ரோல் பம்பில் துபாய் மன்னர் ஷேக் முகம்மதுவின் ஆளுயுர படம் வைக்கபட்டு, அதன் முன் குடும்பத்தினருடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த சம்பவம் காண்போர் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo