இப்படி நேரத்தை மிச்சப்படுத்துங்கள்.

மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா சமீபத்தில் சமூக ஊடகங்களில் மற்றொரு உத்வேக வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இவர் சமூக ஊடகங்களில் மிகவும் ஆக்டீவான இருப்பவர். அடிக்கடி, உத்வேகம் தரும் வீடியோக்களை பகிர்வார். தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ஒரு பெண் சிறிய அட்டைகளின் உதவியுடன் சிறிது நேரத்தில் டி-சர்ட்டை மடித்து வைப்பதைக் காணலாம். 'அது சின்ன விஷயமாக இருக்கலாம். ஆக்கப்பூர்வமான வேலை, இல்லை என்றால் உலகத்தை மாற்றும். மதிப்புமிக்க நேரத்தை மிச்சப்படுத்துகிறது என குறிப்பிட்டுள்ளார். அந்த பெண்ணின் இந்த நுட்பத்தை நெட்டிசன்கள் பாராட்டியுள்ளனர்.
Tags :