ஸ்டெர்லைட் ஆலை போராட்டம்-துப்பாக்கிச்சூடு - நடவடிக்கைக்கு அனுமதி
தூத்துக்குடியில் கடந்த 2018-ல் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த 100வது நாள் போராட்டத்தில் போலீசாரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் துப்பாக்கிச்சூடு தொடர்பாக அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கைபடி காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தலைமை காவலர் மீது குற்றவழக்கு பதிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 3 வருவாய்துறை அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும்படியும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஏற்கனவே வழங்கிய நிதியுடன் சேர்த்து கூடுதலாக தலா ரூ. 5 லட்சம் நிதி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Tags : ஸ்டெர்லைட் ஆலை போராட்டம்-துப்பாக்கிச்சூடு - நடவடிக்கைக்கு அனுமதி