140 மொழிகளில் பாடல்.. கின்னஸ் சாதனையில் கேரள பெண்

'கான்சர்ட் ஃபார் க்ளைமேட்' நிகழ்ச்சியில் பாடிய கேரளாவைச் சேர்ந்த சுசேதா சதீஷ் என்ற இளம்பெண் கின்னஸ் உலக சாதனையில் இடம் பிடித்தார். ஒரே கச்சேரியில் 140 மொழிகளில் அதிக பாடல்களை பாடி இந்த சாதனையை படைத்துள்ளார். காலநிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஏற்பாடு செய்யப்பட்ட இசை விழாவில் பங்கேற்றார். 24 நவம்பர் 2023 அன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரக அரங்கில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
Tags :