கனமழை எச்சரிக்கை கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை 

by Editor / 19-05-2024 10:57:16am
கனமழை எச்சரிக்கை கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை 

 தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பெய்து வரும் நிலையில்  மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் நிறை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்த நிலையில்,  நேற்று பழைய குற்றாலம் அருவியில்  திடீரென்று ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில்  சுற்றுலா பயணிகள் சிக்கிக் கொண்டதோடு  சிறுவன் அஸ்வின் என்பவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு பலியானார். 

கனமழை எச்சரிக்கை  காரணமாக அருவிகள் மற்றும் நீர் நிலைகளுக்கு  செல்ல தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில்  மறு உத்தரவு வரும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
 இந்த நிலையில் பெரியகுளம் அருகே உள்ள  கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் வட்டக்கானல், வெள்ளகெவி, பாம்பாராபுரம்  உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டால்  சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளதால் மறு உத்தரவு வரும் வரை நாளை முதல் கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிப்பதாக தேவதானப்பட்டி வனச்சரக வனத்துறையினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

 

Tags : கனமழை எச்சரிக்கை கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை 

Share via