கொரோனா தொற்றால் முன்னாள் மத்திய அமைச்சர் உயிரிழப்பு!

by Editor / 13-05-2021 08:20:20am
கொரோனா தொற்றால் முன்னாள் மத்திய அமைச்சர் உயிரிழப்பு!

முன்னாள் மத்திய அமைச்சரும், அசாம் மாநில காங்கிரஸ் தலைவருமான மாதாங் சின் கொரோனா தொற்றால் காலமானார். டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 59. மாதாங் சின்னிற்கு கடந்த மாதம் 22ஆம் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனையடுத்து அவர் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காததால் அவர் உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்றால் நாளுக்கு உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சாமான்ய மக்கள் முதல் விவிஐபிக்கள் வரை வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். அதே போல் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் மாதாங் சின் நோய் தொற்றால் உயிரிழந்துள்ளார். கிழக்கு அசாமில் உள்ள டின்சுகியாவில் இருந்து வந்த காங்கிரஸ் தலைவர் மாதாங் 1992இல் அசாம் மாநிலங்களவையில் தேர்ந்தெடுக்கப்பட்டார். சின் 1994 முதல் 1998 வரை மத்திய நாடாளுமன்ற விவகார அமைச்சராக பணியாற்றினார். வடகிழக்கு பகுதி தொடர்பான பெரும்பாலான முடிவுகளில் முக்கிய பங்கு வகித்தவர். இவர் முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவ். நெருங்கிய உறவினர் ஆவார். கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துக்கள் கூறியதை தொடர்ந்து, நிலக்கரி தொடர்பான புகாரில் சிக்சி 1998இல் காங்கிரசிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

 

Tags :

Share via