10 ரூபாய்க்கு சாப்பாடு போட்டு ரூ.100 கோடி மோசடி.

by Editor / 26-01-2025 10:31:59pm
10 ரூபாய்க்கு சாப்பாடு போட்டு ரூ.100 கோடி மோசடி.

சேலம் மாவட்டத்தில் திருமண மண்டபத்தை வாடகைக்கு எடுத்த மோசடி கும்பல், ரூ.10க்கு சாப்பாடு வழங்குவதாக கூறியுள்ளது. அதனை நம்பி ஏராளமானோர் அங்கு குவிந்தனர். அவர்களிடம், பணம் முதலீடு செய்தால் 7 மாதங்களில் இரட்டிப்பாக கொடுக்கப்படும் என அந்த கும்பல் விளம்பரம் செய்தது. இதனால் பலர் ரூ.50,000 - ரூ.5 லட்சம் வரை பணம் கொடுத்துள்ளனர். இதனையறிந்த போலீசார் நடத்திய விசாரணையில், அந்த மோசடி கும்பல் ரூ.100 கோடி வரை பணத்தை அபேஸ் செய்தது தெரியவந்துள்ளது.

தொடர்ந்து நடத்திய விசாரணையில் அறக்கட்டளையை நடத்தும் விஜயா பானு மீது ஏற்கனவே பல மோசடி வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது.
திருமண மண்டபத்திலிருந்து ரூ.12 கோடி பணம், 2.5 கிலோ தங்கம், 13 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டது. இதனை அடுத்து விஜயா பானு, ஜெயப்பிரதா மற்றும் பாஸ்கர் என 3 பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

 

Tags : 10 ரூபாய்க்கு சாப்பாடு போட்டு ரூ.100 கோடி மோசடி.

Share via