ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி.யைதாக்கியதாக முதல்வரின் தனிச்செயலாளர் கைது.

by Editor / 19-05-2024 10:21:04am
ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி.யைதாக்கியதாக முதல்வரின் தனிச்செயலாளர் கைது.

ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. ஸ்வாதி மாலிவாலை தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி செயலாளர் பிபவ் குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திப்பதற்காக ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஸ்வாதி மாலிவால் கடந்த 13 ஆம் அவரது வீட்டுக்கு சென்றிருந்தார். அப்போது கெஜ்ரிவாலின் தனி செயலாளர் பிபவ் குமார், ஸ்வாதி மாலிவாலை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி சிவில் லைன் காவல் நிலையத்தில் ஸ்வாதி மாலிவால் எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்தார்.

பிபவ் குமார் தன்னை தகாத வார்த்தைகளால் திட்டி, கன்னத்தில் பலமுறை ஓங்கி அறைந்ததாகவும், வயிற்றில் எட்டி உதைத்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார். இதன்பேரில், கொலை மிரட்டல், மானபங்கம், தாக்குதல், அவதூறாக பேசுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பிபவ் குமார் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்தநிலையில், டெல்லி முதலமைச்சர் இல்லத்தில் வைத்து பிபவ் குமாரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அவரை சிவில் லைன் காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில் அவர் கெஜ்ரிவாலை சந்தித்துவிட்டு சாதாரணமாக மாடிப்படியில் நடந்துவரும் விடியோக்காட்சி வெளியிடப்பட்டுள்ளன.

 

Tags : ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி.யைதாக்கியதாக முதல்வரின் தனிச்செயலாளர் கைது.

Share via