பாஜக அலுவலக திறப்பு விழா, ஈஷா யோகா மைய சிவராத்திரி விழாவில் இன்று பங்கேற்கிறார் அமித் ஷா

இரண்டு நாள் பயணமாக, தமிழ்நாடு வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கோவை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பாஜக மாவட்ட அலுவலகத்தை இன்று காலை திறந்துவைக்கும் அமித் ஷா, ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நேற்றிரவு கோவை வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவரை, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர்கள் தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பாஜவினரின் உற்சாக வரவேற்பினை ஏற்றுக்கொண்ட அமித் ஷா, அவிநாசி சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்குவதற்காக காரில் புறப்பட்டுச் சென்றார். அவருடன் அண்ணாமலை மற்றும் முக்கிய நிர்வாகிகள் சென்றனர். அப்போது, தொண்டர்களை அமித் ஷா சந்தித்தார்.
Tags :