சின்ன,,சின்ன..சில வரி செய்திகள்..

by Editor / 21-11-2021 11:21:02am
சின்ன,,சின்ன..சில வரி செய்திகள்..

சென்னையில் 17வது நாளாக இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி, நேற்றைய விலைக்கே விற்பனை.பெட்ரோல்: ரூ.101.40 | டீசல் ரூ.91.43,

தமிழகத்தில் இன்று 10வது மெகா தடுப்பூசி முகாம், 50,000 மையங்களில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
பெரம்பலூர் அருகே கோழிப்பண்ணையில் வெள்ள நீர் புகுந்ததால் 3 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட கறிக்கோழிகள் உயிரிழப்பு: வருவாய்த்துறையினர் விசாரணை.

சென்னை எண்ணூரில் பத்தாவது தடுப்பூசி முகாமை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
 வேதாரண்ணியம் நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த லதா அரக்கோணம் நகராட்சி ஆணையராக பணியிட மாற்றம்.
தமிழ்நாடு சீனியர் மகளிர் கால்பந்து அணிக்கு உரிய ஊக்கத் தொகை வழங்கப்படும்; சாதனை படைத்த மகளிர் கால்பந்து அணிக்கு அரசு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்”.- விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி ஆணையாளர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலராக ரவிச்சந்திரன் நியமனம் 
 

 

Tags :

Share via

More stories

Logo