டெல்லியில் நிலஅதிர்வு.. பிரதமர் மோடி வேண்டுகோள்

டெல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலஅதிர்வு உணரப்பட்டதாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். மேலும், அனைவரும் அமைதி காக்கவும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தியுள்ளார். நிலைமையை அதிகாரிகள் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இன்று (பிப்.,17) காலை ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக வீடுகளில் இருந்த பொதுமக்கள் பலர் பீதியடைந்தனர். நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகியுள்ளது.
Tags :