பி. சுசீலாவுக்கு முனைவர் பட்டத்தை வழங்கினார் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்

பின்னணி பாடகி பி. சுசீலாவுக்கு மதிப்புறு முனைவர் பட்டத்தை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வழங்கினார். 5 முறை தேசிய விருது பெற்ற பி. சுசீலா, பல்வேறு மொழிகளில் 25, 000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலை. யில் நடந்த பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வழங்கினார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் பி. சுசீலாவுக்கு முதல்வர் ஸ்டாலின் பட்டம் வழங்கினார்.
Tags :