அனைவருக்கும் நன்றி:பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை

by Editor / 16-12-2023 09:40:01am
அனைவருக்கும் நன்றி:பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை

தேமுதிக பொதுச்செயலாளராக தேர்வானதற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தேமுதிக தலைவர் கேப்டன் பொதுச்செயலாளராக என்னை தேர்வு செய்தற்கு வாழ்த்து தெரிவித்த அதிமுக பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், மதிப்பிற்குரிய சசிகலா,த.மா.க.தலைவர்  ஜி.கே.வாசன், பாமக தலைவர்.அன்புமணி ராமதாஸ், புதிய நீதிக்கட்சி தலைவர்.ஏ.சி.சண்முகம்,அதிமுக முன்னாள் அமைச்சர்கள்  டி.ஜெயக்குமார், விஜயபாஸ்கர், முக்குலத்தோர் புலிப்படைத்தலைவர் கருணாஸ், மற்றும் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் எனக்கு தொலைபேசி மூலமாகவும், சமூக வலைதளங்கள் மூலமாகவும், நேரிலும் வாழ்த்துக்களை தெரிவித்த நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Tags : அனைவருக்கும் நன்றி:பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை

Share via

More stories

Logo