வாகனம் கவிழ்ந்து 8 சிஆர்பிஎஃப் வீரர்கள் காயம்
ஜம்மு காஷ்மீரில் வாகனம் கவிழ்ந்ததில் சிஆர்பிஎஃப் வீரர்கள் காயமடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் கந்தர்பால் மாவட்டத்தின் சிந்து நல்லா என்ற பகுதியில் வாகனம் கவிழ்ந்ததில் எட்டு மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) வீரர்கள் காயமடைந்துள்ளனர். சிஆர்பிஎஃப் வீரர்கள் அதிகாலையில் பால்டால் வழியே அமர்நாத் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. காயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு பால்டால் முகாம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
Tags :