10ஆம் வகுப்பு மாணவன் கார் ஏற்றிக் கொலை.. பகீர் சம்பவம்

திருவனந்தபுரம் பூவாச்சலில் 10ஆம் மாணவர் கார் ஏற்றிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவனின் தூரத்து உறவினரான பிரியராஞ்சன் என்பவர் காரை ஏற்றிக்கொன்றுவிட்டு, வேகமாக செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கோவில் வளாகத்தில் சிறுநீர் கழித்தது குறித்து கேள்வி எழுப்பியதால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். குற்றவாளி தலைமறைவாகியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அருண்குமார், தீபா தம்பதியரின் மகன் ஆதிசேகர் ஆகஸ்ட் 30ஆம் தேதி மாலை வீட்டின் அருகே கார் மோதி உயிரிழந்தார்.
Tags :