பனிச்சரிவில் சிக்கிக் கொண்ட தமிழர்கள் மீட்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் கோவிலுக்கு புனித யாத்திரை சென்ற தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 17 நபர்கள் அமர்நாத் அருகே ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக, ஸ்ரீநகருக்கான பாதை முற்றிலும் சேதமடைந்து அந்த பாதையிலே சிக்கி கொண்டார்கள். சிக்கிக் கொண்ட 17 நபர்களும், தமிழ்நாடு அரசின் மூலம் பயணச்சீட்டுகள் பெற்றுத்தரப்பட்டு நேற்று ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தனர். பிறகு, அவர்களை தமிழ்நாடு அரசின் சார்பாக அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் மற்றும் அரசு அலுவலர்கள் வரவேற்று அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைத்தனர்.
Tags :