நாடாளுமன்ற பாதுகாப்பு அதிகாரிகள் 7 பேர் சஸ்பெண்ட்

by Staff / 14-12-2023 12:32:24pm
நாடாளுமன்ற பாதுகாப்பு அதிகாரிகள் 7 பேர் சஸ்பெண்ட்

பாதுகாப்பு குறைபாடு விவகாரத்தில் மக்களவை செயலகத்தை சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிகள் 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். நேற்று மக்களவையில் இரு இளைஞர்கள் கலர் புகை வெளியேறும் பொருட்களை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. நாடாளுமன்றத்தில் பெரும் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இச்சம்பவத்திற்கு பல்வேறு மாநில முதல்வர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த சூழலில், நாடாளுமன்றத்தின் இன்றைய அலுவல்கள் தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக அதிகாரிகள் 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

 

Tags :

Share via

More stories