புதிய தொழில்நுட்பம் தீங்கிழைக்கும் பயன்பாட்டிற்கு எதிராக அமைய வேண்டும்-ஐ நா பொதுச் செயலாளர்

by Writer / 21-07-2023 09:39:12am
 புதிய தொழில்நுட்பம் தீங்கிழைக்கும் பயன்பாட்டிற்கு எதிராக அமைய வேண்டும்-ஐ நா பொதுச் செயலாளர்

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ஐ நா பொதுச் செயலாளர் செயற்கை நுண்ணறிவுத் திறனை அது மனித வளர்ச்சியை எவ்வாறு விரைவுப்படுத்தும் ஆற்றல் உடையதாக திகழ்கிறது என்பதை வலியுறுத்தி பேசினார்..

புரட்சிகரமான ,இந்த புதிய தொழில்நுட்பம் தீங்கிழைக்கும் பயன்பாட்டிற்கு எதிராக அமைய வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தார்.. அந்தோனியோ குட்டர்ஸ் ஏ ஐ முதன்மையாக சைபர் தாக்குதலை தொடங்குவதற்கும் ஆழமான போலிகளை உருவாக்குவதற்கும் தவறான தகவல் மற்றும் வெறுப்பை உங்கள கூடிய பேச்சுக்களை பரப்புவதற்கும் ஒரு ஆயுதமாக மாறினால் அது உலகத்தினுடைய அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் மிகப்பெரிய ஒரு சவாலாக அமையும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்

.சமூக ஊடகங்களை தவிர வேறு எதையும் பார்க்க வேண்டாம் என்றும் மனித தொடர்பை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட கருவிகள் தளங்கள் இப்போது தேர்தலை குறை மதிப்பிற்கு உட்படுத்தவும் சதி கோட்பாடுகளை பரப்பவும் வெறுப்பு வன்முறையை தூண்டவும் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் எடுத்துரைத்தார்.

தவறான செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் மிகப்பெரிய கவலைக்குரியதாக மாறி வருவதாகவும் செயற்கை நுண்ணறிவு மற்றும் அணு ஆயுதங்கள் உயிரிழி தொழில்நுட்பம் நரம்பியல் தொழில்நுட்பம் ரோபாட்டிக்ஸ் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு மிக ஆழமான ஆபத்துடையதாகவும் செயற்கை நுண்ணறிவு நிர்வாகம் அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்

. செயற்கை நுண்ணறிய நிர்வாகத்தின் மீதான சிக்கலான விவாதத்தை அவர் தெளிவுபடுத்தினார் உலகளாவிய அணுகுமுறையின் அவசியத்தையும் கடந்த காலங்களில் இது போன்ற அனுபவங்களையும் அவள் மேற்க்காட்டி சொன்னதோடு ஒரு முன்னோக்கி செல்லக்கூடிய வழியை ஐநா வழங்குவதாகவும் குறிப்பிட்டார் .

நம் சமூகங்கள் பொருளாதாரங்களையும் சீர்குலைக்கும் திறன் கொண்ட புதிய தொழில்நுட்பங்களுக்கு பதிலளிப்பதில் சர்வதேச சமூகம் நீண்ட ஒரு வரலாற்றைப் பெற்றுள்ளதாகவும் புதிய சர்வதேச விதிகளை அமைப்பதற்கும் புதிய ஒப்பந்தங்களை கையெழுத்து இடுவதற்கும் புதிய உலகளாவிய நிறுவனங்களை நிறுவுவதற்கும் ஐநா ஒருங்கிணைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார் கொடிய தன்னாட்சி ஆயுத அமைப்புகளின் வழிகாட்டும் கோட்பாடுகள் செயற்கை நுண்ணறிவு நெறிமுறைகள் பற்றிய பரிந்துரைகள் ஐந்தாம் மன்றங்களில் விவாதிக்கப்படும் பொருளாக எடுத்து பேசுவதற்கு ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது கடந்த மாதம் ஜெனிவாவில் கூட்டப்பட்ட ஏஐ பார் குட் உச்சி மாநாடு புதிய தொழில்நுட்பம் பொது நலனுக்கான சேவை செய்வதை உறுதி செய்வதற்கு வல்லுநர்கள் தனியார் துறை ஐநா ஏஜென்சிகள் அரசாங்கம் ஒன்றிணைந்து ஒரு பெரிய திறன் இடைவெளியை உருவாக்க வேண்டும் என்றும் அரசாங்கங்கள் பிற அதிகாரத்துவ நிறுவன ங்கள் ,செயற்கை நுண்ணறிவு சுற்றியுள்ள திறன் இடைவெளியை அவர் சுட்டிக் காட்டினார்.

தேசிய மற்றும் உலகளாவிய நிலையில் இது கவனிக்கப்பட வேண்டும் என்றும் சர்வதேச அணுசக்தி நிறுவனம் சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அரசுகளுக்கு இடையான குழு போன்ற மாதிரிகளால் இந்த அசாதாரண தொழில்நுட்பத்தை நிர்வகிக்கும் கூட்டு முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் புதிய ஐக்கிய நாடுகளின் நிறுவனத்தை உருவாக்க சில உறுப்பு நாடுகளின் அழைப்புகளை ஏற்க வேண்டிய நிலையில் உள்ளதாகவும் பருவநிலை மாற்றத்தையும் நாம் வரவேற்பதாகவும் குறிப்பிட்ட ஒரு புதிய ஐநா நிறுவனம் திறன் வாய்ந்த சர்வதேச சமூகத்தின் வசம் வைக்கும் நிலையான வளர்ச்சியை துரிது படுத்த செயற்கை நுண்ணறிவுக் களில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான ஒத்துழைப்பை ஆதரிக்க கூடிய கொள்கைகளின் விருப்பங்களாகவும் இருப்பதாக கூட்டரசு செயற்கை நுண்ணறிவுக்கான உயர் மட்ட கூட்டத்தை கூட்ட இருப்பதாகவும் தெரிவித்தார்.

இது இந்த ஆண்டு கடைசியில் ஓர் உலகளாவிய ஆளுகைக்கான விருப்பங்களை தெரிவிக்க கூடியதாகவும் அமைதிக்கான புதிய நிகழ்ச்சி நிரல் புதிய கொள்கை விளக்கத்தையும் வெளியிடப் போவதாகவும் கூறியுள்ளார். புதிய உறுப்பு நாடுகளுக்கு செயற்கை நுண்ணறிவு குறித்த பரிந்துரைகளையும் இந்த அமைப்பு வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.

 

 புதிய தொழில்நுட்பம் தீங்கிழைக்கும் பயன்பாட்டிற்கு எதிராக அமைய வேண்டும்-ஐ நா பொதுச் செயலாளர்
 

Tags :

Share via