பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் பேச்சுவார்த்தை

by Staff / 12-04-2022 01:30:31pm
பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் பேச்சுவார்த்தை

இந்தியா-அமெரிக்கா இடையிலான இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் காணொளி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தியா அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உறவை வலுப்படுத்த இரு நாடுகள் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதற்கு முன்னோட்டமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இடையே காணொளி மூலம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் பேசிய பிரதமர் மோடி உக்ரைனில் கவலைக்குரிய சூழலில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்றால் நாட்டின் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது தொடர்பாக கவலை தெரிவித்து தொடர் நியாயமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். ரஷ்ய  இடையிலான பேச்சுவார்த்தை அமைதிக்கு வழிவகுக்கும் என நம்புவதாக தெரிவித்த அவர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக அந்நாட்டு தலைவருடன் தொலைபேசியில் பேசியதாக கூறினார். .அதேபோல் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி யுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்துமாறு ரஷ்ய அதிபர் புதின் இடம் தெரிவித்ததாக பிரதமர் மோடி குறிப்பிட்டார் மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கு இந்தியா சார்பில் மருந்துகள் மற்றும் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் உக்ரேனின்  கோரிக்கையை ஏற்று மேலும் மருந்துகள் விரைவில் அனுப்பி வைக்கப்படும் என ஜோ பைடன் ஆலோசனையின் போது பிரதமர் கூறினார்.உக்ரேனுக்கு  மனிதாபிமான உதவிகளை வழங்கும் இந்தியாவின் நடவடிக்கைகளை வரவேற்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். மேலும் இந்திய அமெரிக்க வேகமாக வளர்ந்து வரும் பாதுகாப்பு உறவுகளை கொண்டுள்ளதாகவும் இரு நாடுகளுக்கு இடையிலான நல்லுறவு தான் இரு நாட்டு உறவில் முக்கிய அம்சம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

Tags :

Share via