by Staff /
09-07-2023
01:09:39pm
கேரளாவின் கண்ணூர் அருகே சிறுவன், அவனது தந்தையால் வெட்டப்பட்ட மரம், விழுந்ததில் உயிரிழந்தார். கல்லடம் பகுதியில் வசிக்கும் நாசர் மற்றும் ஜுபைரியா தம்பதியரின் மகன் முஹம்மது ஜுபைர் (9), வித்யாமித்ரம் நடுநிலைப்பள்ளி 4ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், வீட்டின் முன்பு ஆபத்தாக இருந்த மரத்தை தந்தை வெட்டிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு மகன் நின்று கொண்டிருந்ததை தந்தை கவனிக்கவில்லை. எதிர்பாராதவிதமாக மரம் மகன் மீது விழுந்தது. இதில் சிறுவன் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக கண்ணூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார்.
Tags :
Share via