குற்றாலம் பிரபல சாரல் ரிசார்ட்டில் கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்.

by Editor / 09-08-2023 09:52:13pm
குற்றாலம் பிரபல சாரல் ரிசார்ட்டில் கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்.

தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் ரிசார்ட் ஆன சாரல்  ரிசார்ட் உணவகத்தில் தரமற்ற பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் சென்றிருந்த நிலையில், இன்று தென்காசி வட்டார உணவு பாதுகாப்பு துறை அதிகாரி நாகசுப்பிரமணியம் குற்றாலம் பகுதியில் உள்ள சாரல் ரிசார்ட்டில் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது, அந்த ரிசார்ட்டில் உள்ள ரெஸ்டாரண்டில் சமைக்க வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்களை சோதனை செய்தபோது, அவைகள் தரமற்ற பொருட்களாக இருப்பது தெரியவந்தது.

அதனை தொடர்ந்து, அந்த ரெஸ்டாரண்டில் இருந்த சுமார் 28 கிலோ மதிக்கத்தக்க சிக்கன், மீன் உள்ளிட்ட இறைச்சி வகைகளை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி, இது போன்று தரமற்ற உணவுப்பொருட்களை வினியோக செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

 மேலும், குற்றால பகுதியில் உள்ள பிரபல ரிசார்ட்டில் கெட்டுப்போன பயன்படுத்த முடியாத தரமற்ற இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் சுற்றுலா பயணிகள் இடையே உணவுப் பொருட்கள் குறித்தான ஒரு அச்சம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

குற்றாலம் பிரபல சாரல் ரிசார்ட்டில் கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்.
 

Tags :

Share via