ஹனுமன் கோயிலில் கெஜ்ரிவால் சாமி தரிசனம்

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, திஹார் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த கெஜ்ரிவால் இன்று கன்னாட் பிளேசில் உள்ள ஹனுமான் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தி, சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து அவர் அங்கிருந்து தனது அலுவலகத்திற்கு பேரணியாக செல்ல இருக்கிறார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.
Tags :