அ.தி.மு.க.வில்அடுத்தடுத்து நிகழும் காட்சிகள் ...வெல்லப்போவது பன்னீர் சேனையா.. எடப்பாடி சேனையா...

அ.தி.மு.க.வில்அடுத்தடுத்து நிகழும் காட்சிகள் ...வெல்லப்போவது பன்னீர் சேனையா.. எடப்பாடி சேனையா...
கடுமையான மன இறுக்கத்தில் இரு அணியினரும் இருந்து கொண்டிருக்கிறார்கள்.அடுத்து என்ன நடக்கும் என்றுஅணியினரும் யோசித்து காய் நகர்த்தக்கூடிய காலம் இப்பொழுது இருவருக்கும் இல்லை.என்ன மாதிரியான வியூகம் வகுப்தெரியாமல்திணறிக்கொண்டிருக்கிறார்கள் .சசிகலா எதாவது ஒரு வழியில் நுழைந்தால் ... என்ன தான் மாவடடச்செயலாளர் , பொதுக்க உறுப்பினர்,எம்.எல்.ஏ.க்கள் என கட்சியினரை தம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும் எடப்பாடி ஒர் அச்சத்தில் தான் தன் நாள்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார். அள்ளி வீசப்படும்பணம் பொதுச்செயலாளராவது வரை வருமா என்கிற உள்ளுர எழும் பயம்.அடுத்தடுத்து நீதி மன்றம் செல்லும் பன்னீர்..உரிமையியல் நீதி மன்றம் இருவரையும் விளக்கமளிக்க உத்திரவு பிறபித்திருக்கிறது .உயர் நீதி மன்றம் பொதுக்குழுவில் நீதிமன்ற உத்தரவை மீறி அவைத்தலைவர் நியமனம் குறித்த அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது என சுழன்றடிக்கும் சூறாவளி முன்னோட்டம். இதற்கிடையே கட்சியினரை கட்டுக்குள் வைத்துகொள்ள ஸ்ரீவாரு வெங்கடேச மாளிகையில் நடக்கும் பணி ஏற்பாடுகள்.கடந்த பொதுக்குழுவில் பன்னீர்செல்வம் நடத்தப்பட்டவிதம்.சமூக, அரசியல் செயல்பாட்டாளர்களின் எதிர்ப்புக்குரல்..பன்னீர்செல்வம் சார்ந்த சமூகத்தின் கோபம் என்ன மாதிரியான வடிவமெடுக்கும் என்று கணிக்க இயலாமல் தவித்து வருகின்றனர், எடப்பாடி அணியினர். கப்பம் கட்டி வந்தமாவட்டச்செயலாவர்கள்,எம்.எல்.ஏக்கள்,முன்னாள் அமைச்சர்கள் இப்பொழுது ஒற்றைத்தலைமையால் கப்பம் வாங்கும் குறு நில மன்னர்களாக உயர்ந்திருக்கிறார்கள்.இதை யாரும் இழக்க விரும்பவில்லை.அதனால் தான் கட்சிக்குள் எடப்பாடிக்கு அதிகரித்திருக்கும் செல்வாக்கு .பன்னீருக்கு கட்சித் தொண்டர்கள் ,வெகுஜனங்களின் ஆதரவுஎப்படி இருக்கப்போகிறதோ..... பொறுத்திருப்பபோம்
Tags :