பார்லிமெண்டுக்கு சைக்கிளில் வந்த  திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள்

by Editor / 19-07-2021 04:53:01pm
பார்லிமெண்டுக்கு சைக்கிளில் வந்த  திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள்


பார்லிமெண்ட் மழைகால கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள்  பார்லிமெண்டுக்கு சைக்கிளில் வந்தனர்.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, ஒருசில மாதங்கள் வரை பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இதன் பின்னர் கடந்த ஜனவரி மாதம் முதல் மீண்டும் எண்ணெய் நிறுவனங்கள் படிப்படியாக விலையை உயர்த்தின. தொடர்ந்து பெட்ரோல் விலை உயர்ந்து வரும் நிலையில் தமிழகம் உட்பட பல மாநிலங்களிலும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.
மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சிகளும் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. 17-வது மக்களவையின் 6-வது கூட்டத் தொடர்தொடங்கியது. முதல் நாளன்று பெட்ரோல் - டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் பார்லிமெண்டுக்கு சைக்கிளில் வந்தனர்.

டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்த பதாகைகளையும் தங்கள் உடம்பில் கட்டியிருந்தனர். பார்லிமெண்ட் நுழைவு வாயிலுக்கு வந்த அவர்கள் பெட்ரோல் - டீசல் விலை உயர்வைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

 

Tags :

Share via