அரசியல் காரணங்களுக்காக நடந்த சோதனை" - அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் பேட்டி

by Staff / 26-02-2025 01:24:16pm
அரசியல் காரணங்களுக்காக நடந்த சோதனை

அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் வீட்டில்13 மணி நேரம் சோதனை நடந்த நிலையில், வருமான கணக்குகள் அனைத்தையும் சரியாக தாக்கல் செய்திருப்பதாக அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் கூறினார்.அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் வீட்டில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை 13 மணி நேரத்திற்குப் பிறகு நிறைவடைந்தது. கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏவாக உள்ள அம்மன் அர்ஜுனன், 2016 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில், வருமானத்திற்கு அதிகமாக இரண்டு கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகளை வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.இது குறித்து, அம்மன் அர்ஜுனன் மற்றும் அவரது மனைவி விஜயலட்சுமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறையினர், கோவை செல்வபுரத்தில் உள்ள வீடு மற்றும் சாமநாயக்கன்பாளையத்தில் உள்ள தொழிற்சாலையில் சோதனையில் ஈடுபட்டனர்.

 

Tags :

Share via