அனைத்து கட்சி கூட்டத்திற்கு 45 கட்சிகளுக்கு தமிழக அரசு அழைப்பு

மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படும் விவகாரம் தொடர்பாக விவாதிக்க மார்ச் 5-ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாடு 8 தொகுதிகளை இழக்க நேரிடும் எனவும், அதற்கு எதிராக குரல் கொடுக்க பதிவு செய்யப்பட்ட 40 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி மக்கள்தொகயை கட்டுப்படுத்தி நிலையில், தற்போது தமிழ்நாட்டின் உரிமை பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இன்னொரு மொழிப் போருக்கு மத்திய அரசு வித்திடுவதாகவும், அதற்கு தயாராக இருப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
Tags :