தேனீக்கள் கொட்டியதில் 49 பேர் காயம்
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள தங்கமலை கரடு பகுதியில் விநாயகர் சதுர்த்தியை ஓட்டி கிராம மக்கள் சார்பில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து சிலையை கரைப்பதற்காக ஏராளமானவர்கள் வேன் மற்றும் இரு சக்கர வாகனங்களில் தங்கமலை கருடன் அருகே உள்ள கீழ்வாணி வாய்க்காலுக்கு சென்றனர். பின்னர் சிறுவர்கள் வானில் இருக்க பெரியவர்கள் கரையில் இருந்து வேப்ப மரத்தை பிடித்து வாய்க்காலுக்குள் விநாயகர் சிலையை கரைக்க இறங்க முயற்சி செய்தனர். அப்போது மரத்திலிருந்து தேனீக்கள் கூடும் மீது எதிர்பாராத விதமாக ஒருவரது கை பட்டுள்ளது. இதில் கூட்டில் இருந்த தேனீக்கள் கலைந்து அங்கும் இங்குமாக பறந்து சென்றது இதனால் அங்கிருந்து அனைவரும் அலறி அடித்து ஓடினார்கள். தேனீக்கள் அவர்களை விரட்டி விரட்டி கொட்டியது இதில் தங்க மலை கரண்டை சேர்ந்த சச்சின், ஜோஸ்னா, சஞ்சய், சுதிக்ஷனா, மூர்த்தி, பாலமுருகன், நவநீஷ், நவீன், உள்ளிட்ட 49 பேர் படுகாயம் அடைந்தனர் அதை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் 42 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர் மற்ற ஏழு பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து கோபிசெட்டிபாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Tags :



















